மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகினார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!
Washington Sundar Ruled Out Of WI Series
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்.
இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான, டி20 தொடர் நாளை முதல் துவங்க இருக்கும் நிலையில், இந்தியாவின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கிறார். டி20 போட்டிகளில் ரன்ரேட் 6-ற்கும் கீழ் வைத்து பந்து வீசி வரும் சுந்தர், தொடர் காயத்தினால் பல வாய்ப்புகளை தவற விடுகிறார்.
“ காயத்தினால் வாய்ப்புகளை தவற விட்டு கிரிக்கெட் உலகையே இழந்தவர்கள் பலர், அந்த வரிசையில் வாஷிங்டன் சுந்தர் இணைந்து விட கூடாது என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது “