இப்படி ஒரு கேவலமான கேம் விளையாட எனக்கு விருப்பம் இல்லை – தமீம் இக்பால்
வங்கதேச வீரர்களுக்கான உலககோப்பை ஸ்குவாடில் இருந்து டிராப் செய்யப்பட்ட தமீம் இக்பால் இப்படி ஒரு கேவலமான கேம் விளையாட எனக்கும் விருப்பம் இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முதலில் என்னிடம் உலககோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நீங்கள் விளையாட வேண்டாம் என்று கூறினார்கள் பின்னர் நீங்கள் கீழ் நிலையில் தான் பேட்டிங் ஆட இருக்கிறீர்கள் என்றார்கள். என்னை எந்த விதத்திலும் ஒரு வீரராக மதிக்கவில்லை. என்னை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். இப்படி ஒரு கேவலமான கேம் விளையாட எனக்கு விருப்பம் இல்லை என இக்பால் கூறி இருக்கிறார்.
இன்னொரு பக்கம் வங்கதேச கிரிக்கெட் போர்டோ அவர் காயத்தினால் அவதிப்படுகிறார். அதனால் தான் முதல் போட்டி விளையாட வேண்டாம் அப்படியே விளையாடினால் கீழ்நிலை வீரராக விளையாடுங்கள் என்று கூறினோம் என்கிறது. உலக கோப்பையின் முதல் போட்டிக்கு இன்னமும் 10 நாளுக்கு மேல் இருக்கும் போது அந்த காயத்தில் இருந்து என்னால் வெளி வந்து விட முடியாத என தமீம் இக்பால் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
” ஆக மொத்தம் தற்போது உலககோப்பை ஸ்குவாடில் தமீம் இக்பால் இல்லை, அது என்னவோ வங்கதேச அணிக்கு தான் நிச்சயம் பாதிப்பாக இருக்கும். ஒரு நல்ல சீனியர் பிளேயரை சாதாரண பிரச்சினைகளால் இழந்து நிற்கிறது வங்கதேச அணி “