தனது சம்பளத்தை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம் கொடுத்த ராஷித்!
WC 2023 Rashid Khan Donated His Salary To Afghanistan Earth Quake Victims Idamporul
தனது சம்பளத்தை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்து இருக்கிறார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராஷித் கான்.
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இயற்கே பேரிடர் வேறு அங்கு வசிக்கும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலககோப்பையில் தான் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியை ஆப்கானிஸ்தானில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஷித் முன்வந்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
” அவ்வப்போது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார் ராஷித் கான். அவர் நல்ல பவுலர் மட்டும் அல்ல, நல்ல மனித நேயம் உள்ளவர் என இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர் “