எந்தெந்த அணிகள் உலககோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும், மெக்ராத் கணிப்பு!
Which Teams Will Reach Semi Final Glenn Mcrath Idamporul
எந்தெந்த அணிகள் உலககோப்பைக்கு தகுதி பெரும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்து இருக்கிறார்.
ஒரு நாள் போட்டிக்கான உலககோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் எந்தெந்த அணிகள் செமிஸ்க்கு தகுதி பெறும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்து இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆஸ்திரேலியாவும் செமிபைனலில் இருக்கும் என அவர் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற இருப்பதால் நிச்சயம் களம் பெரும்பான்மையாக இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும், பாகிஸ்தான் சமீப காலமாக சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே தங்கள் பலத்தை ஒவ்வொரு தொடரிலும் நிரூபித்து வருகின்றனர். இதனால் இந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கணித்து இருப்பதாக மெக்ராத் கூறி இருக்கிறார்.
“ கே எல் ராகுல், ஸ்ரேயஸ், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்பினால் நிச்சயம் இந்திய அணி இறுதிப்போட்டியில் நிற்கவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் மெக்ராத் கூறி இருக்கிறார் “