இலங்கை அணி வீரரை சென்னை அணியில் இணைத்ததற்கு இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு!
Boycott CSK Controversy
இலங்கை வீரர் மஹீஷ் தீக்சனாவை சென்னை அணியில் இணைத்ததற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப் பட்டதை அடுத்து தொடர்ந்து இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் இனம் புரியா பகை இருந்து வருகிறது. இதை காரணமாக வைத்தே இலங்கை வீரர் மஹீஷ் தீக்சனாவை சென்னை அணியில் எடுத்ததற்கு தமிழகம் எங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
“ இந்த எதிர்ப்பை காட்டும் விதத்தில் இரண்டு நாட்களாக ‘Boycott CSK’ என்ற ஹேஸ்டாக்கும் இணையத்தில் ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது “