ஏன் திடீரென்று ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்து விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது?
சில நாட்களாகவே ஹர்திக் பாண்டியா – நட்டாஷாவின் விவாகரத்து விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, இந்த நிலையில் அதில் உண்மை தன்மை எதுவும் இல்லை எனவும் சில காரணங்களுக்காக இந்த சேதி பரப்பப்பட்டு வருவதாகவும் ஒரு கருத்து உலவி வருகிறது.
மும்பை நிர்வாகம் ஹர்திக்கை அதிக விலைக்கு ட்ரேட் எடுத்து, தலைமைப் பொறுப்பையும் கொடுத்ததும், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை விட்டு விலகி, மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு அரங்கேறியதில் இருந்தே ஹர்திக் பாண்டியா மீது பொதுவான ரசிகர்கள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டு இருந்தனர். இந்த வெறுப்பு சமூக வலைதளங்கள் முழுக்க பரவியது.
ஹர்திக் பாண்டியாவும் பெரிதாக இந்த ஐபிஎல் லில் மும்பை அணியின் கேப்டனாகவும் சரி, ஒரு பிளேயராகவும் சரி சுத்தமாக ஜொலிக்கவில்லை, இதன் காரணத்தால் அவர் மீதான வெறுப்பு இன்னமும் சமூக வலைதளங்களில் அதிகமாகியது. ஐபிஎல் முடிந்து இருந்தாலும் கூட ஹர்திக் பாண்டியா மீதான வெறுப்பு என்பது இன்னும் ரசிகர்களிடையே குறைந்தபாடில்லை.
இதை எப்படித்தான் எதிர்கொள்வது என யோசித்த ஹர்திக் பாண்டியா & கோவிற்கு கையில் சிக்கியது விவாகரத்து கன்டண்ட், சரி இப்படி ஒரு விஷயத்தை பரப்பி விடுவோம் சமூக வலைதளம் எப்படி நம்மை பார்க்கிறது என்று பார்க்கலாம் என யோசித்த ஹர்திக் & கோவிற்கு இந்த கன்டண்ட் நல்ல பாசிட்டிவான ரிசல்ட்டையே கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெறுப்பு தற்போது சிம்பதியாக மாறி இருப்பதால் இதை இன்னமும் கொஞ்ச நாளுக்கு தொடர்ந்து விட்டு அப்படி எல்லாம் ஏதும் இல்லை, நாங்கள் இணைந்து தான் இருக்கிறோம் என ஒரு அறிவிப்பை வெளியிடுவது தான் ஹர்திக் & கோ வின் பிளேன் என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
“ தற்போதெல்லாம் பாசிட்டிவ் பப்ளிசிட்டிக்கு ஒரு நெகட்டிவ் சேதி தேவைப்படுகிறது. ஏதாவது ஒரு நெகட்டிவிட்டி பரவி வந்தால், கூடவே ஒரு அனுதாபத்தை முன்வைத்து அதை அழித்து விடுகின்றனர், இணையம் அதற்கும் நன்றாகவே வழி விட்டுக் கொடுக்கிறது “