மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் டி காக் விலகியது ஏன்? காரணம் இதோ!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நடந்து முடிந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் குயின்டன் டி காக் விலகியது ஏன் என்ற கேள்வி இணையத்தை அதிரச் செய்து வருகிறது.
அமெரிக்காவில் நடைபெறும் கருப்பினத்தினவருக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்து உலகம் முழுக்க மக்கள் ’Black Lives Matter’ என்ற கூக்குரலை எழுப்பி வருகின்றனர். உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு கள்ள நோட்டு விவகாரத்தில் பிடிபட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு என்பவரை விசாரணை என்ற பெயரில் அமெரிக்க காவல் துறை கழுத்தில் மிதித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் குரல் வளை உடைந்து மூச்சி திணறி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த ஒன்று மட்டும் அல்ல அமெரிக்காவில் இது போல பல சம்பவங்கள் கருப்பினத்தவர்களுக்கு எதிராக அரங்கேறி இருக்கிறது. இந்த நிலையில் தான் டி20 உலககோப்பை போட்டியிலும் பல்வேறு அணியின் வீரர்கள் மண்டியிட்டு நெஞ்சினில் கை வைத்து ‘Black Lives Matter’ என்ற கோட்பாட்டுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
முந்தைய போட்டியில் ‘Black Lives Matter’ என்ற கோட்பாட்டின் கீழ் எல்லா தென் ஆப்பிரிக்க அணியினரும் மண்டியிட்டு கைகளை நெஞ்சில் வைத்து கருப்பினத்தினருக்காக தங்கள் ஆதரவை தெரிவித்த போது, டி காக் மட்டும் அதை செய்யவில்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போது ‘இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்’ என்று கூறி நடப்பு போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார் டி காக். டி காக்-கின் இந்த செயலுக்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்தும் தொடர்ந்து கண்டனங்கள் பெருகி வருகிறது.
“ இது குறித்து மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கேப்டன் டேரன் சாமி கூறுகையில் இது ஒரு சிறிய விடயம், இதற்கு ஆதரவு தெரிவிப்பதால் இவர்களுக்கு என்ன நிகழ்ந்து விட போகிறது என்று தெரியவில்லை என்று காட்டமாக கூறி இருக்கிறார் “