ஏன் பெங்களுரு அணி ஒவ்வொரு வருடமும் ஐபிஎல்லில் சொதப்புகிறது?
கிட்ட தட்ட 16 ஐபிஎல் சீசன்களில் 1 கோப்பை கூட ஏன் பெங்களுரு அணிக்கு கிட்டவில்லை என்பதற்கு இங்கு பல காரணங்கள் இருக்கிறது.
பொதுவாக பெங்களுரு அணி நிர்வாகம் ஏலத்தில் மூன்று நான்கு பெரும் புள்ளிகளுக்கு பல கோடி நிர்ணயித்து ஏலத்தில் எடுத்து விட்டு, மீதி வீரர்களுக்கு காசு இல்லாமல் அல்லாடிக் கொண்டு நிற்கும். கிட்ட தட்ட 16 சீசன்களும் நடந்த கதை இது தான். மூன்று நான்கு பேட்டர்ஸ்களுக்கு அல்லது ஒரிரு பவுலர்களுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்து விட்டு, ஒரு சரியான அணிக்கலவை இல்லாமல் வருடம் வருடம் சொதப்புவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள்.
தற்போதைய அணியை எடுத்துக் கொண்டால் பேட்டிங் வரிசையில் 300 ரன்கள் கூட பெங்களுரு அணிக்கு அடிக்கும் திறன் இருக்கிறது. ஆனால் பவுலிங்கை எடுத்துப் பார்த்தால் அந்த 300 ரன்னையும் விட்டுக் கொடுக்கும் வரிசை தான் அவர்களிடம் இருக்கிறது. அவர்களின் நட்சத்திர பவுலரே சிராஜ் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், அவர்களது பவுலிங் கட்டமைப்பு எப்படி இருக்கிறதென்று!
“ கேப்டன்சிப்பை குறை கூறி ஒன்றும் ஆகப்போவதில்லை, அணியை ஒட்டு மொத்தமாக மெகா ஏலத்தில் கலைத்து விட்டு நல்ல வீரர்களை ஆராய்ந்து எடுப்பது தான் பெங்களுரு அணிக்கு அவசியமாகிறது “