ஏன் இந்த டி20 உலககோப்பை இவ்வளவு போர் அடிக்கிறது?
டி20 போட்டிகள் என்றாலே விறுவிறுப்பின் உச்சம் ஆனால், இந்த டி20 உலககோப்பை தொடர் படுபோர் ஆக சென்று கொண்டு இருக்கிறது.
பொதுவாக டி20 போட்டி என்பது அதிரடி களம் ஆக அறியப்படும், பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு தான் டி20 போட்டிகள் சாதகமாக இருக்கும், 20 ஓவர்களுக்கு 200 ரன்களுக்கும் மேல் அடித்து விட்டு எதிரணியினர் அதை அதிரடியாக சேஸ் செய்வது தான் டி20 போட்டிக்கான வழக்கம். இந்த வருட ஐபிஎல்லில் கூட 250 ரன்களுக்கு மேல் எல்லாம் சில அணிகள் அடித்து துவைத்தனர். அப்படி எல்லாம் போட்டிகளை கண்டு களித்து விட்டு தற்போது டி20 உலககோப்பை தொடரை பார்க்கும் போது பெரும்பாலான ரசிகர்கள் சொல்வது செம்ம போரிங் தொடர் என்பது தான்.
எல்லா போட்டிகளும் லோ ஸ்கோரிங் போட்டிகளாகவே அமைவதால் இந்த வருட டி20 உலககோப்பை தொடர் ஆல்மோஸ்ட் ஒரு ப்ளாப் என்றதொரு ரிவ்யூவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இஸ்டத்திற்கு கிரவுண்டுகளை உருவாக்கி வைத்து விட்டு அதில் பேட்ஸ்மேன்களை ஆட விட்டு ஐசிசி ஒரு ரிஸ்க் எடுக்கிறது என்றே சொல்லலாம். நியூயார்க் கிரவுண்டுகள் எல்லாம் படு மோசமான ஆடுகளமாக இருப்பதால் பவுலர்களால் கூட ஒரு பந்து எப்படி சென்று பேட்ஸ்மேன்களை அடையும் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை.
20 ஓவர்களில் 120 ரன்களை தொடுவதே நியூயார்க் ஆடுகளத்தில் எடுப்பது பெரிய விடயமாக இருக்கிறது. இந்தியாவிற்கு பெரும்பாலான போட்டிகள் நியூயார்க்கில் இருப்பதால், ரோஹிட், விராட், சூர்யகுமார் யாதவ், துபே போன்ற அதிரடி வீரர்களை எல்லாம் வைத்து இருக்கும் இந்திய அணியும் ஒவ்வொரு போட்டியிலும் பாலுக்கு ஏத்த ரன்களை குவிப்பதில் கூட சிரமப்பட்டு தான் வருகிறது.
“ இனியாவது ஐசிசி ஏதாவது வித்தியாசமாக செய்கிறோம் என்றில்லாமல், போட்டிகளை நடத்துவதற்கு சரியான களங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் கொள்ள வேண்டும், ஐசிசி செய்த மிகப்பெரிய தவறால் நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற சரவதேச அணிகள் எல்லாம் இந்த தொடரில் பெரிய பெரிய அப்செட்டுகளை சந்தித்து வருகிறது “