T20 Series | 3rd Match | ’இங்கிலாந்து அணியை வெளுத்து வாங்கி காயப்போட்ட மேற்கிந்திய தீவுகள் அணி’
WI vs ENG T20 Series 3rd Match WestIndies Take A Huge Win Against England
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வெளுத்து வாங்கி அதிரடி காட்டி வென்று இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ரோவ்மன் பவல்லின் அதிரடி சதத்தால் 107(53), 224 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணியினரால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி. அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பவல் ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
“ டி20 உலக கோப்பை வரும் சூழலில் உலக கிரிக்கெட் அணிகளுக்கு தனது அதிரடிகளை காட்டி எச்சரிக்கை விடுக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி “