எதிர்காலங்களில் ரோஹிட் சர்மாவின் தலைமை இந்திய அணிக்கு சறுக்கலை தான் தருமா?
தொடர்காயங்களின் காரணமாக முக்கியமான தொடரை எல்லாம் வரிசையாக கைவிட்டு விடுகிறார் ரோஹிட். இதன் காரணமாக களத்தில் இல்லாத ஒருவரால் அணியின் நிலையை எப்படி உணர முடியும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.
சமீபத்தில் விராட் கோலியை நீக்கி விட்டு லிமிட்டடு ஓவர் போட்டிகளுக்கு ரோஹிட்டை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. ஆனால் அவரோ முக்கியமான தொடரில் எல்லாம் காயம் என்று கலண்டு விடுகிறார். களத்தில் இல்லாத ஒருவரால் அணியின் நிலையையோ எதிரணியின் நிலையையோ எப்படி உணர முடியும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.
அணியோடு தொடர்ந்து பயணிக்காத ஒருவரால் நிச்சயம் அணியின் தன்மையை உணர்ந்து தலைமையை சிறப்பாக செயல்படுத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு தலைமை பொறுப்பில் ஒரு மாற்று தீர்வை பிசிசிஐ எடுத்தே ஆக வேண்டும்.
” இல்லை என்றால் நிச்சயம் வரப்போகும் முக்கியமான ஐசிசி தொடர்களில் எல்லாம் இந்திய அணிக்கு நிச்சயம் சறுக்கல்களே மிஞ்சும். தலைமை அணியின் சீதோஷ்ண நிலையை உணரவில்லையெனில் அணியும், அணியின் செயல்பாடும் நிச்சயம் உருக்குலைந்து விடும் “