காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் அயர்லாந்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப்பிடித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ஐந்து லீக் ஆட்டங்களை ஆடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் வென்று இரண்டு வெற்றிகளை மட்டுமே தன் வசம் வைத்திருந்தது. இதனால் நான்காவது இடத்திற்கு இந்தியாவிற்கும் அயர்லாந்து அணிக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் பிரிவு ஏ வின் கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து இங்கிலாந்து அணியிடம் மோதியது. இதில் அயர்லாந்து தோற்றால் மட்டுமே இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெறும் என்கிற சூழல் இருந்த நிலையில் 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி பிரிவு ஏ வில் நான்காவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.
“ தகுதி பெற்றது மட்டும் போதாது தங்கத்தோடு வாருங்கள் தங்க மங்கைகளே “