WPL | Final | ’டெல்லியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை’
மகளிர் டி20 ப்ரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது மும்பை.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. வழக்கமாக இறுதிப்போட்டி என்றாலே அழுத்தம் பயங்கரமாக இருக்கும். ஆனால் ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அதை சரியாக எதிர்கொண்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது.
“ துவக்கம் முதலே அதிரடி காட்டிய ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை மகளிர் அணி நிச்சயம் கோப்பைக்கு தகுதியான அணி தான் “