WTC Final | ‘காயமுற்ற கே எல் ராகுலுக்கு பதில் அழைக்கப்பட்டு இருக்கும் இஷான் கிஷன்’
WTC Final Ishan Kishan Called For Replacement Of KL Rahul Idamporul
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் காயமுற்ற கே எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் களம் இறங்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.
ஐபிஎல் போட்டியின் போது காயமுற்ற கே எல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பிலும் பங்கேற்க முடியாத சூழலில் அவருக்கு பதில் மாற்று வீரராக இஷான் கிஷனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. ஸ்டாண்ட் பை பிளேயர்களாக ருதுராஜ், சூர்ய குமார் யாதவ் உள்ளிட்டோர்களையும் அறிவித்து இருக்கிறது.
“ ஒரு பக்கம் இஷான் கிஷன் டெஸ்ட் அழைப்பிற்கு வரவேற்பு இருந்தாலும் கூட, ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி வாய்ப்புக்காக காத்து இருக்கும் வீரர்களை எல்லாம் விட்டு விட்டு ஐபிஎல் விளையாடிவர்களில் இருந்து டெஸ்ட் சாம்பியன்சிப்பிற்கு போட்டியாளர்களை பிசிசிஐ எடுப்பது என்பது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது “