WTC Ranking | ‘இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா’
World Test Championship Ranking After WI Series India Down To Second Place Idamporul
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு பின் தங்கி இருக்கிறது இந்தியா.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்தியா. இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிடவே, போட்டி டிராவில் முடிந்தது. ஒரு டிரா, ஒரு வெற்றி என்பதால் WTC புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டு 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது இந்தியா.
“ முதல் இடத்தை 100 சதவிகித வெற்றிகளுடன் பாகிஸ்தான் பிடித்து இருக்கிறது, மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா (54.17%) இருக்கிறது, நான்காவது இடத்தை இங்கிலாந்து (29.17%) பிடித்து இருக்கிறது “