முதலில் கேப்டன் என்று சொல்லி விட்டு பின்னர் நீக்கியது கஸ்டமாக தான் இருந்தது – தவான்
ஆசியன் கேம்ஸ்சில் முதலில் என்னை கேப்டன் என்று அறிவித்து விட்டு, பின்னர் ஸ்குவாடில் கூட என்னை இணைக்காதது கஸ்டமாக தான் இருந்தது என தவான் பேட்டி அளித்து இருக்கிறார்.
ஆசியன் கேம்ஸ்சில் முதலில் பிசிசிஐ என்னை கேப்டனாக அறிவித்து இருந்தது. பின்னர் ருதுராஜ் அவர்களை கேப்டனாக நியமித்தது. ஸ்குவாடிலும் என் பெயர் இல்லை. இதெல்லாம் கஸ்டமாக தான் இருந்தது. பரவாயில்லை இளைஞர்கள் விளையாடுவதில் தப்பில்லை என ஷிகர் தவான் நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்து இருக்கிறார்.
தற்போதெல்லாம் பிசிசிஐ வீரர்களை வீரர்களாக மதிப்பதே இல்லை. ஏதோ விளையாடும் பொம்மை போல நடத்தி வருகிறது. அனைவரும் ஏதோ அதன் கீழ் ரோபோட் போல செயல்பட்டு வருகின்றனர். தவான் போன்ற ஒரு சீனியர் வீரரை பிசிசிஐ இப்படி நடத்தியது நிச்சயம் கண்டனத்திற்கு உரியது தான்.
“ உலககோப்பை மற்றும் சர்வதேச போட்டிகளில் எல்லாம் நட்சத்திரமாக ஜொலித்த ஒரு நட்சத்திர வீரருக்கு பிசிசிஐ கொடுத்த இந்த அவமதிப்பிற்கு ரசிகர்கள் பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர் “