பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை – பிரதமர்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டை தொடர்ந்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிக்கை விடுத்துள்ளார்.
உலகின் மிகத் தொன்மையான மொழியாக கருதப்படும் தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அத்தகைய பெருமை மிக்க தமிழ் மொழியோடு ஊறிப் பிறந்து தேசியப் பற்று படைப்புகளுக்கும், தமிழ்ப் படைப்புகள் பலவற்றிற்கும் வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பெயரில் உத்திரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.
“ தமிழ் மற்றும் தமிழ் மொழி சம்மந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த பாரதியார் ஆய்வு இருக்கை மிகவும் உபயோகமாக இருக்கும் என்று தனது அறிக்கையில் மேற்கோள் காட்டி பிரதமர் மோடி அவர்கள் கூறி உள்ளார். தமிழின் மேன்மை தேசமெங்கும் பரவிக் கிடக்கிறது தோண்டினாலும் தமிழே கிடைக்கிறது. தேடினாலும் தமிழே கிடைக்கிறது. புகழ் பாட வேண்டுமானாலும் தமிழ் மொழியே முன் நிற்கிறது. தமிழ் இன்னமும் நிமிரட்டும் “