தமிழகம் | பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

Tamilnadu Nurses Announcing Strike

Tamilnadu Nurses Announcing Strike

சென்னை தேனாம்பேட்டை மருத்துவ வளாகத்தில் பணி நியமனம் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனோ சூழலில் அரசு மருத்துவமனைகளில் பணி புரிவதற்காக அவசர நடவடிக்கையாக மூன்று கட்டமாக கான்டிராக்ட் முறையில் நர்ஸ்கள் பணி அமர்த்தப்பட்டனர். அதில் ஒரு பாதியினருக்கு இன்னமும் நிரந்தர பணியானை வழங்கப்படாததால் அவர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவிய கொரோனோ சூழலில் அதிக செவிலியர்கள் தேவைப்பட்டதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மூன்று கட்டமாக செவிலியர்களை கான்டிராக்ட் முறையில் பணி அமர்த்தி இருந்தது. அதில் முதல் மற்றும் மூன்றாம் கட்டமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு நிரந்த பணி நியமன ஆணை வழங்கிய போதும், இரண்டாம் கட்டமாக எடுக்க செவிலியர்கள் கிடப்பில் போட பட்டனர்.

இந்த நிலையில் தேர்தலின் போது தற்போதைய அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான செவிலியர்கள் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற கோரி நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேனாம்பேட்டை மருத்துவ வளாகத்தில் உள்ளிருப்பு மற்றும் உண்ணா விரத போராட்டத்தை அறிவித்து இருக்கின்றனர்.

“ கொரோனோ காலத்தில் உயிரை முன்நிறுத்தி பணிபுரிந்த எங்களுக்கு பணி நிரந்தரம் என்ற ஒரு கோரிக்கையை நிறைவேற்றிடுங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது “

About Author