பொறியியல் சேர்க்கை நிகர மதிப்பெண் கணக்கீட்டில் இருந்து வேதியியல் பிரிவு நீக்கம் – தமிழக அரசு
தமிழக அரசு, பொறியியல் சேர்க்கை குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது பொறியியல் சேர்க்கை நிகர மதிப்பெண்கள் கணிதம்,இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளின் மதிப்பெண்களின் மூலம் கணக்கீடு செய்யப்படும். தற்போது அந்த நிகர மதிப்பெண்ணில் இருந்து வேதியியல் பிரிவு நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொதுவாகவே பொறியியல் சேர்க்கை என்றால் கணிதம்,இயற்பியல்,வேதியியல் பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண்ணிலிருந்து நிகர மதிப்பெண் கணக்கிட்டு அவர்களை கவுன்சிலிங் மூலம் வரிசைப்படி அழைத்து அந்த நிகர மதிப்பெண் வாரியாகவே சேர்க்கை நடைபெறும். தற்போது அந்த நிகர மதிப்பெண்ணிலிருந்து வேதியியல் பிரிவை நீக்கி கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்னே பொறியியல் சேர்க்கைக்கு போதுமானது என்று தமிழக அரசு அறிக்கை விடுத்துள்ளது.
“ பொதுவாகவே ஒரு பிரிவைச்சேர இது தான் பாடம் என்று வரையறை செய்து விட்டால் மற்ற பாடங்களை படிப்பதை நீக்கி விட்டு அதில் மட்டும் மூளையைச்சலவை செய்வது மாணாக்கரின் செயல்பாடு, அது போலவே இனி வேதியியல் பாடப்பிரிவும் மாணாக்கரின் மனதில் ஒரு ஒதுக்கி வைக்கப்படும் பாடம் ஆகி விடக்கூடும் என்று ஆசிரியர்கள் தரப்பினர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர் “