தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை!
தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை விதிப்பதாக தமிழக அரசு அறிக்கை விடுத்துள்ளது.
நிகழ்ந்து வரும் கொரோனோ சூழலில், மூன்றாம் அலையைத் தவிர்க்க பண்டிகைகள், விழாக்களை கொஞ்ச நாட்களுக்கு துறக்க சொல்லி மத்திய சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தடைகளின் மீதும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் மீதும் தளர்வுகளை தேடிக்கொண்டே இருக்காதீர்கள் அது இன்று இருக்கும் சூழலை பேரிடர் நிலையாக மாற்றக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆகவே மக்கள் கொஞ்ச நாட்களுக்கு திருவிழாக்கள், பண்டிகைகளை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டாடுங்கள் என்று அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் விடப்பட்டுள்ளது.
“ தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து ஒரு அரசினால் அதை கண்காணிக்க மட்டுமே முடியும், அந்த கண்காணிப்பையும் மீறி செயல்படுகிற ஒரு சில கூட்டங்களின் செயல்பாடுகள் தான் தொற்றின் பரவலுக்கு வழிவகுத்து, முறையாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பவர்களையும் சேர்த்து பேரிடர் நிலைக்கு தள்ளுகிறது, ஆகவே மதங்கள், சமயங்களைக் கடந்து சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட கடவோமாக “