தமிழகத்தில் 1-8 வரை உள்ள வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழலில் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது.
பெற்றோர்கள் மத்தியில் நிலவி வரும் கொரோனோ அச்சத்தினாலும். தற்போது இருக்கும் கொரோனோ சூழலை கருத்தில் கொண்டும் இப்போதைக்கு 1-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அலை பெரும்பாலும் 18 வயதிற்குள்ளவர்களை தாக்கும் என்று மத்திய அரசு அறிக்கை விடுத்துள்ளதால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு கொரோனோ குறித்த அச்சம் இன்னமும் நீங்காமல் இருக்கிறது. இதன் காரணமாகவே பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளையும் அனுப்ப பெற்றோர்கள் பயப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டே இந்த முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
“ இரண்டு வருடங்களாக பள்ளிகள் இல்லை, ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் மாணவர்கள் அதன் மேல் பெரிதாய் ஈடுபாடும் காட்டுவதில்லை. கல்வியும் முக்கியம், குழந்தைகளின் நலனும் முக்கியம் இரண்டுக்கும் நடுவில் குழம்பி போய் இருக்கிறது அரசும் பெற்றோரும் “