தமிழகத்தில் நடைபெற இருக்கிறது மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம்!
TamilNadu Mega Vaccination 2.0 Date Announced
ஏற்கனவே நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமிற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 12 அன்று நடை பெற்ற மெகா தடுப்பூசி முகாமில், 28 லட்சத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டு தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். இந்த வரவேற்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு வருகின்ற செப்டம்பர் 19, ஞாயிறு அன்று மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம் அமைத்திட முடிவெடுத்துள்ளது.
இந்த முகாமின் மூலம் தமிழகம் முழுக்க 40,000 பூத்கள் அமைக்கப்படும் என்றும் அதன் மூலம் மறுபடியும் 20 லட்சத்திற்கும் அதிகமானோரை தடுப்பூசி எடுத்துக் கொள்ள செய்வதையே இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ இதுவரை தகுதியான வயதினர் எனக் கருதப்படுவோர்களில், 52 சதவிகிதம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதை இன்னும் அதிகப்படுத்துவதே இந்த மெகா தடுப்பூசி முகாம்களின் இலக்கு ஆகும் “