தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 24.85 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!
TamilNadu Mega Vaccination 3.0 Reached 24.85 Peoples
தமிழகத்தில் நேற்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் மூலம், ஒரே நாளில் 24.85 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
முதல் மற்றும் இரண்டாம் மெகா தடுப்பூசி முகாம்களுக்கு கிடைத்த பெரிய வரவேற்பின் காரணமாக தமிழகத்தில் நேற்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம், 23,436 முகமைகள் அமைத்து தொடங்கப்பட்டது. மாநிலம் முழுக்க அமைந்துள்ள அந்த 23,436 முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 24.85 லட்சம் பேர் தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 4.68 கோடியைக் கடந்து இருக்கிறது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற அக்டோபருக்குள் தமிழகத்தில் தகுதியுள்ள அத்தனை பேருக்கும் குறைந்த பட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.
“ ஒட்டு மொத்த தேசத்தை பொறுத்தவரை தடுப்பூசி உபயோகம் 85 கோடியைக் கடந்து இருக்கிறது. அதில் தமிழகத்தின் தடுப்பூசி செயல்பாடுகளும் மிகவும் பாராட்டத்தக்கதாகவே உள்ளது “