தமிழகத்தில் நான்கு கோடியைக் கடந்திருக்கிறது தடுப்பூசி உபயோகம்!
தமிழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி பெற்றதன் மூலம் தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் நான்கு கோடியைக் கடந்திருக்கிறது.
மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழக அரசு 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்திருந்தது. ஆனால் அதையும் கடந்து ஒரே நாளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 28.91 லட்சம் பேர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் நான்கு கோடியைக் கடந்திருக்கிறது.
” தடுப்பூசி விழிப்புணர்விலும், தடுப்பூசி உபயோகத்திலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகம், கொரோனோவை கையாள்வதில் நல்ல அனுபவத்துடன் செயல்பட்டு வருகிறது. மூன்றாவது அலைக்கு வாய்ப்புகள் இருந்தாலும் அதை தமிழகம் திறம்பட எதிர்கொள்ளும் என்று அரசு தன்னம்பிக்கையுடன் கூறி வருகிறது “