மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க தீட்டப்படும் சதி!
A Conspiracy To Reopen Sterlite Idamporul
மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க வேதாந்தா நிறுவனம் பல்வேறு வகையில் திட்டம் தீட்டி வருகிறது.
சுகாதார சீர்கேடுகளால் மக்களுக்கு பல காலமாக தீங்கு இழைத்து வந்த ஸ்டெர்லைட் நிறுவனம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்ட நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களை அதற்கு ஆதரவாக பேச வைத்து எப்படியாவது மறுபடியும் திறக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உண்மை என்பது ஸ்டெர்லைட் முழுக்க முழுக்க தூத்துக்குடியை சுற்றி சுகாதார சீர்கேடுகள் செய்தது, அதனால் பல்வேறு மக்கள் இனம் புரியாத நோய்களால் இறந்தது, அதற்கு எதிராக போராடியவர்களை ஆளும் கட்சியை தூண்டி சுட்டுக் கொன்றது. இதை தவிர ஸ்டெர்லைட் பக்கம் எந்த உண்மையும் இருப்பதாக இல்லை என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து
“ மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் புரளும் முக்கிய பிரமுகர்களையும் வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட வைத்து வருகிறது வேதாந்தா குழுமம் மக்கள் உஷாராக இருந்து பொய்யான பதிவுகளை தவிர்க்க வேண்டும் “