சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர சிகிச்சை செலவை அரசு ஏற்கும் – தமிழக அரசு
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர அவசர அவசிய சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.
நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் சாலை விபத்தும் பெருகி வருகிறது. இனி சாலை விபத்தில் சிக்கியவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் முதல் 48 மணி நேரத்திற்கான செலவை அரசு ஏற்பதாக அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 81 மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ பொதுவாகவே சாலை விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவ செலவுகள் அதிகம் ஆகுமோ என்ற பயத்தோடு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், கொஞ்சம் தூரம் கடந்து அரசு மருத்துவமனைகளில் சேர்ப்பதுண்டு. இனி எந்த சிரமமுமின்றி எங்கு வேண்டுமானாலும் சேர்க்கலாம். இத்தகைய திட்டத்தை செயல்படுத்திக் கொடுத்த தமிழக அரசிற்கு நன்றி “