நடிகர் விஜய் அவர்களின் சொகுசு கார் வழக்கு பிப்ரவரி 1-க்கு தள்ளி வைப்பு!
நடிகர் விஜய் அவர்களின் சொகுசு கார் நுழைவு வரி வழக்கு, இன்னமும் ஓயாத நிலையில் இன்றைய நீதிமன்ற வாதத்திற்கு பிறகு மீண்டும் பிப்ரவரி 1-க்கு தள்ளி வைக்கப்பட்டுருக்கிறது.
நடிகர் விஜய் அவர்கள் சொகுசு கார் நுழைவு வரியை செலுத்த தாமதமாக்கியதை சுட்டிக் காட்டி அவருக்கு 400% அபராதம் விதிக்கப் பட்டு இருந்தது. இதை எதிர்த்து விஜய் அவர்கள் மேல் முறையீடு செய்யவே அபராதத்திற்கான தக்க காரணகர்த்தாக்களை கேட்டு அபராதத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்து இருக்கிறது நீதிமன்றம்.
“ பல்வேறு முக்கியமான வழக்குகளில் தொடர்ந்து நீதி தாமதமாகி வரும் இந்த வேளையில், இந்த வழக்கை முடித்து வைக்காமல் இழுவையில் விடுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என்பது தெரியவில்லை “