நீண்ட நாளுக்கு பின்னர் சென்னையில் ஆலங்கட்டி மழை!
Chennai Rains Today17 03 23 Idamporul
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது.
ஒரு சில நாட்களாகவே தமிழகம் எங்கும் வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில், இன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஒரு சில மணி நேரங்களுக்கு மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. மேலும் ஆவடி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பொழிந்ததாகவும் தகவல் கிடைத்து இருக்கிறது.
“ இன்னும் ஒரு சில நாட்களுக்கு வட தமிழகத்தில் ஆங்காங்கே மழை பொழியும் என சென்னை வானிலை மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது “