புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய்க்கு தடை!
After Pudhuchery Tamilnadu Ban Color Panju Mittai Fact Here Idamporul
புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்து உத்தரவு இட்டு இருக்கிறது தமிழக உணவு பாதுகாப்புதுறை.
சென்னை மெரினாவில் பறிமுதல் செய்யப்பட்ட கலர் பஞ்சு மிட்டாய்களிலும் புற்றுநோயை உண்டாக்க கூடிய Rhodaminbe – B நிறமி இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய் தயாரிப்பிற்கும், விற்பனைக்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது தமிழக உணவு பாதுகாப்பு துறை.
“ குழந்தைகள் அதிகம் உண்ணும் கலர் பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் நிறமி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது “