நீட் போராட்டத்திற்காக அமைச்சர் பதவியையும் இழக்க தயார் – உதயநிதி
நீட் போராட்டத்திற்காக என்னுடைய அமைச்சர் பதவியையும் இழக்க தயார் ஆக தான் இருக்கிறேன் என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறி இருக்கிறார்.
ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வு தமிழகத்தில் பல மாணவர்களை கருணையின்றி கொலை செய்து வருகிறது. இனி தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுக்க அனைவரையும் ஒன்று சேர்ப்போம். இந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் என்னுடைய அமைச்சர் பதவியையும் இழக்க தயார் என உதயநிதி கூறி இருக்கிறார்.
“ உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு பெருகினாலும் கூட எதிர்கட்சியும், பாஜகவும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் “