ஆருத்ரா மோசடி விவகாரத்தில் சிக்கும் பிரபல சினிமா தயாரிப்பாளர்!
RK Suresh Accused For Aruthra Case Idamporul
2500 கோடிக்கும் மேல் மோசடி செய்த ஆருத்ரா நிறுவன விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா முதலீட்டு நிறுவனம், முதலீட்டுக்கு 25-30 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றி 2,548 கோடி சுருட்டியதாக தெரிகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஹரீஷ், மாலதி என இருவர் கைதாகி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் அவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இந்த நிலையில் குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வரும் நிலையில், ஆர் கே சுரேஷ் அவர்கள் வெளிநாடு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது “