பான் மற்றும் குட்காவிற்கான தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
Ban On Paan And Gutka Revoked Idamporul
பான் மற்றும் குட்காவிற்கான தடையை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
உணவுதர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பான் மற்றும் குட்கா தடைசெய்யப்பட்டு அதை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. பான் மற்றும் குட்கா உணவுதரக்கட்டுப்பாட்டின் கீழ் இல்லை, தடைக்கு உணவுதர பாதுகாப்பின் கீழ் எந்த சட்டங்களும் இல்லை. ஆதலால் இந்த தடையை ரத்து செய்கிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
“ கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களை மாந்தர்களுள் விதைத்திடும் பான், குட்கா, புகையிலையை தடை செய்வது கூட இந்தியாவில் சாத்தியமற்று இருக்கிறது என்றால் சட்டங்கள் இன்னுமே திருத்தப்பட வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “