நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து களம் காணும் – அண்ணாமலை
Local Body Election TN BJB Contest The Election Alone
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார் அண்ணாமலை.
தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சு இரண்டு நாட்களாக நடந்து வந்த நிலையில், பாஜக 35 சதவிகித இடங்கள், 20 சதவிகித இடங்கள் என்று மாறி மாறி கேட்ட போதும் கூட 8 சதவிகிதமே தர முடியும் என பிடிவாதம் பிடித்தது அதிமுக. இந்த நிலையில் முக்கிய ஆலோசகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு பாஜக தனித்து போட்டி இடுவதாக அறிவித்து இருக்கிறார் அண்ணாமலை.
“ இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் விழுவது புலப்படுகிறது. கூடிய விரைவில் இந்த விரிசல் பெரிதாகி உடைவதற்கும் வாய்ப்புகல் இருக்கிறது “