அவரது பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
Burn His Bike Says Judge TTF Vasan Bail Denied Idamporul
அவரை பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் என்று கூறி வாசனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.
மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பைக் ஓட்டிய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் டிடிஎப் வாசன் அவர்களின், ஜாமீன் மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி வி கார்த்திகேயன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டு, அவரது பைக்கை எரிக்கவும், யூடியூப் சேனலை முழுவதுமாக முடக்கவும் உத்தரவிட்டு இருக்கிறார்.
“ அவரால் பலரும் தப்பான முறையில் Inspire ஆகுவதை தடுக்கவே சேனலை முடக்க நீதிபதி உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஒரு சரியான தண்டனை என இணையவாசிகள் பலரும் நீதிபதியின் உத்தரவிற்கு இசைவு தெரிவித்து வருகின்றனர் “