மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவம், சென்னை இளைஞர் லாக் அப்பில் மரணம்!
Another Lockup Death In Tamilnadu
கடற்கரையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தும் சென்னையை சேர்ந்த விக்னேஷ்(25) என்ற இளைஞர் லாக்கப்பில் மரணம் அடைந்து இருப்பது தமிழகத்தை மீண்டும் உலுக்கி இருக்கிறது.
ஆட்டோவில் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட சென்னையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தும் இளைஞர் விக்னேஷ்(25) லாக் அப்பில் மரணம் அடைந்து இருக்கிறார். காவல் துறை சார்பில் வலிப்பு வந்து இறந்து விட்டதாக கூறப்பட்டாலும் அவரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
பல்வேறு பகுதியில் இருந்தும் அழுத்தம் கொடுத்ததால் மட்டுமே சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு இருக்கும் இந்த வழக்கு, வெளியில் தெரியாமலே இருந்தால் என்ன ஆகும்? அதிகாரவர்க்கத்தினர்களால் அப்படியே மூடப்பட்டிருக்கும்.
“ அதிகாரம் எல்லா அதிகாரிகளுக்கும் இருக்கதான் செய்கிறது. ஆனால் உயிரை எடுக்கும் அளவுக்கு இல்லை என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் “