சென்னை ஐஐடியில் கூட்டு பாலியல் வன்கொடுமை, புகார் அளித்த மாணவியிடம் ஆதாரம் கேட்ட நிர்வாகம்!
சென்னை ஐஐடியில் கூட்டு பாலியல் வன்கொடுமை அரங்கேறி இருப்பதாக மாணவி ஒருவர் புகார் அளித்து இருக்கிறார்.
சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தன்னை போல் பலருக்கும் இது நிகழ்ந்து இருப்பதாகவும் மாணவியே முன்வந்து புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். ஆனால் நிர்வாகமோ புகார் அளித்த அந்த மாணவியிடம் ஆதாரம் கேட்டு இருக்கிறதாம்.
ஒரு பாலியல் புகார் ஒன்று வந்தால் அந்த புகார் சம்மந்தமாக விசாரிக்க வேண்டுமே தவிர, அந்த புகாரின் கீழ் ஆதாரம் கேட்பதற்கு இது என்ன கொலை குற்றமா? இல்லை அந்த பெண்னை வன்புணர்வுக்குள்ளாக்கும் போது அந்த பெண் ஆதாரம் கேட்பார்களே என்பதற்காக தான் சீரழிவதை வீடியோ எடுக்க வேண்டுமா?
“ தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த புகாருக்கான முகாந்திரத்தை கையில் எடுத்து சம்பவம் உணமையெனில் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை “