ஏழு தமிழர் விடுதலை இந்த முறையாவது பரிசீலிக்கப் படுமா?
தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை முடித்த 700 கைதிகள் முறையான சட்ட விதிமுறைக்குட்பட்டு விடுவிக்கப்படுவர் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் ஏழு தமிழர்களின் விடுதலையும் அடங்குமா என்பதே இங்கு பலரின் கேள்வியாக இருக்கிறது.
இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுநாத் கூறுகையில்10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை முடித்த 700 கைதிகள் முறையான சட்ட விதிமுறைக்குட்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர். அந்த பட்டியல் இன்னும் 20 நாட்களுக்குள் ரெடி ஆகும் என்றும், ஏழு தமிழர் விடுதலை குறித்து முதல்வர் சீக்கிரம் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசத்துரோகம், குண்டு வெடிப்பு போன்ற கடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் இதில் இடம்பெறாது என்றும் ’க்கு’ வைத்து அறிக்கை விடுத்துள்ளது தமிழக சட்டதுறை அமைச்சகம்.
“ எதிர்கட்சியாக இருக்கும் போது ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுக்கின்றனர். அதே எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறும் போது சீக்கிரம் முடிவெடுக்கப்படும் என்று ஆட்சி முடியும் வரை கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டு இருக்கின்றனர் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கொந்தளிப்பாக இருக்கிறது “