தமிழகத்தில் கொரோனோ இன்னமும் சமூகப்பரவலாகவே இருக்கிறது – சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனோவானது இன்னமும் சமூகப்பரவலாக தொடர்வதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 பேர் தொற்றுக்கு உள்ளாவதாகவும், அதில் 200 பேருக்கு தொற்று எப்படி பரவுகிறதே என்று தெரியாமல் இருக்கிறது என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதன் மூலம் கொரோனோ இன்னமும் தமிழகத்தில் சமூகப்பரவலாகவே இருப்பது அறியப்படுகிறது.
ஒரு மாநிலத்தில் Index Case அதிகமாகும் போது அது சமூகப் பரவலாக கொள்ளப்படும். பரவல் யார் மூலம், எப்படி வந்தது, என்று அறிய முடியாத பரவலுக்கு உட்பட்டவரை தான் Index Case-யில் சேர்ப்பர். அந்த வகையில் தமிழகத்தில் தினமும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் Index Case-ஆகவே இருக்கின்றனர். இதன் மூலமாகவே தமிழகத்தில் கொரோனோ இன்னமும் சமூகப் பரவலாகவே இருப்பதாக அறியப்படுகிறது.
“ மாஸ்க் உபயோகிப்பது தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. சமூகப் பரவல், ஒமிக்ரான் தொற்று என்று நிலவி வரும் இந்த சூழலில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாகிறது. ஆகவே விட்டவர்கள் மீண்டும் முகக்கவசத்தை கைப்பிடியுங்கள் “