தமிழகத்தில் இரு நூறை நெருங்கியது தினசரி கொரோனா தொற்று!
Corona Updates In Tamilnadu 05 04 23 Idamporul
தமிழகத்தில் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 200-யை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹாட் ஸ்பாட்கள் கண்டறியப்பட்டு சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“ உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகம் மட்டும் அல்லாது கர்நாடகா, கேரளா, மஹாராஸ்டிரா உள்ளிட்ட பகுதிகளையும் அச்சுறுத்தி வருவதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது “