கொரோனா நிலவரம் | தமிழ்நாடு | ஐந்தாயிரத்தை தொட்டு இருக்கும் தினசரி பாதிப்பு!
Corona Updates In TamilNadu 06 01 2022
தமிழகத்தில் இன்று மட்டும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இது போக இன்று மட்டும் ஒன்பது பேர் தமிழகத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி தமிழகத்தில் 36,814 ஆகி இருக்கிறது.
“ ஏற்கனவே தொற்று பரவலை கருத்தில் கொண்டு ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு மற்றும் கல்லூர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது “