தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று நானூற்றைக் கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 403 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தொற்றினால் இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை. ஆயினும் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா தொற்றின் விகிதம் தமிழகம் எங்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
“ உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவலை மேற்கொண்டாலும் அதன் வீரியம் அந்த அளவுக்கு இல்லை என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் மக்களை மீண்டும் முகக்கவசம் அணிவித்திட ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது “