தமிழகத்திற்குள் நுழைந்ததா மிக வேகமாக பரவும் திறன் கொண்ட BF7 கொரோனா வேரியன்ட்?
Corona BF 7 Variant In TN Idamporul
மிக வேகமாக பரவும் திறன் கொண்ட BF7 கொரோனா வேரியன்ட் தமிழகத்திற்குள் நுழைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து BF7 வேரியன்ட் தமிழகத்திலும் நுழைந்து விட்டதோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. இன்னமும் அது BF7 வேரியன்டா என்பது கண்டறியப்படவில்லை ஆனாலும் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ கொரோனோ அலை ஓய்ந்தது ஓய்ந்தது என ஒவ்வொரு முறை சொல்லும் போதெல்லாம் புதிய வேரியண்ட் ஒன்று கிளம்பி வந்து விடுகிறது. மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வது ஒன்றே இதற்கு தீர்வாகும் “