தமிழகத்தில் இன்றைய தினத்தில் மட்டும் 1,303 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,303 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 13 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,796 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,428 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் ஐந்து கோடியைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. அக்டோபர் முடிவதற்கும் பெரும்பாலான தடுப்பூசிக்கு தகுதியானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

” ஒட்டு மொத்த தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 96 கோடி, தமிழகத்தில் 5 கோடி என்று தடுப்பூசி செயல்பாடுகள் பிற நாடுகளே மெச்சும் அளவுக்கு சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது “

About Author