இன்று மட்டும் தமிழகத்தில் 1,233 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,233 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 15 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,884 ஆக உயர்ந்து உள்ளது.
இது போக இன்று மட்டும் தமிழகத்தில் 1,434 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 5.27 கோடியாக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு மொத்த தேசத்திலும் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 73 பேர் தானாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
“ தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொண்டால், தேசம் எத்தனை அலை வந்தாலும் எளிதில் எதிர் கொள்ளும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. தன்னலம் கருதியாவது தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்பதே அரசின் கோரிக்கையாக இருக்கிறது “