கொரோனோ நிலவரம் | தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 12 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,060 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,315 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். குறைந்து வரும் தொற்று, பெருகி வரும் மீட்பு விகிதம் என்று ஓரளவுக்கு தேசத்தில், கொரோனோ கட்டுப்பாட்டுக்குள் அடங்கி இருக்கிறது. தேசத்தில் தடுப்பூசி உபயோகமும் 104 கோடியை தொட்டு இருக்கிறது.

“ தடுப்பூசி உபயோகம் அதிகரிக்கும் போது தொற்று குறைவதும், தொற்றினால் ஏற்படும் இறப்பு குறைவதும் பொதுவாகவே எல்லா மாநிலங்களிலும் கண்கூடாகவே தெரிகிறது. ஆதலால் இங்கு கொரோனோ மீண்டும் எழாமல் இருக்க வேண்டுமெனில் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் “

About Author