கொரோனோ நிலவரம் | தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,039 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In TamilNadu 30 10 2021
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 1,039 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 11 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,083 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்று மட்டும் தமிழகத்தில் 1,229 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் மீட்பு விகிதம் 98.22 ஆக உள்ளது. தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 5.73 கோடியாக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு மொத்த தேசத்திலும் தடுப்பூசி உபயோகம் 105 கோடியைக் கடந்து இருக்கிறது.
“ புதியரக கொரோனோ, மூன்றாவது அலை இதெல்லாம் சாத்தியம் தான், ஆனால் இந்த சாத்தியக் கூறுகளில் அகப்பட்டு விடாமல் இருக்க ஒவ்வொருவரும் இரண்டு தவணையும் தடுப்பூசின் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது “