தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Covid Updates In TamilNadu 08 10 2021
இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,754 ஆக உயர்ந்து உள்ளது.
இது போக தமிழகத்தில் இன்றைய தினத்தில் மட்டும் 1,473 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.98 கோடியைத் தொட்டு இருக்கிறது. இன்னும் இரு நாட்களில் தடுப்பூசி உபயோகம் தமிழகத்தில் 5 கோடி என்ற இமாலய இலக்கை அடைந்து விடும்.
“ இந்த அக்டோபர் முடிவதற்குள் தடுப்பூசிக்கு தகுதியான அத்தனை பேருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறது நமது தமிழக அரசு. அந்த இலக்கினை நோக்கி நாம் ஆகிய ஒவ்வொருவரும் நகர வேண்டும் என்பதே, நம் சுகாதாரத்துறை அமைச்சகம் நமக்கு முன் வைக்கும் கோரிக்கை “