மகளிடம் அத்து மீறிய கணவனைக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை!
Daughter Assualt Case Father Killed Mother Released
சென்னையில் தன் மகளை காக்கும் நோக்கில் தன் கணவனையே அடித்துக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் தனது 20 வயது மகளிடம் அத்து மீறீயதை அடுத்து அவரின் மனைவியே அவரை சுத்தியலால் தாக்கியதாய் தெரிகிறது. இதில் அவர் இறந்து விடவே வழக்கு காவல் நிலையத்திற்கு சென்றது. தன் மகளைக் காக்கவே, தாக்கியதை கருத்தில் கொண்டு அப்பெண் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
“ இதற்கு முன் இதே போல திருவள்ளூரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்ட பெண் இதே போல விடுவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது “