தமிழகத்தில் கொரோனாவை விட வேகமெடுக்கும் டெங்கு!
தமிழகத்தில் கொரோனாவை விட டெங்கு வேகமெடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொசுக்களின் மூலம் பரவுகின்ற டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் கொரோனாவை விட வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆங்காங்கே இறப்புகளும் பதிவாகி வருகிறது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களும், மருத்துவ வல்லுநர்களும் வலியிருத்தி வருகின்றனர்.
காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக இரத்தப்பரிசோதனை செய்து தகுந்த மருத்துவர்களை அணுகவும். வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு காய்ச்சலை தீவிரப்படுத்தி விட வேண்டாம். அது கட்டுப்படுத்தமுடியாத நிலையை அடையலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
“ டெங்கு உறுதியானால் அதிகப்படியான நீர்ச்சத்து ஆகாரங்களை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது, இளநீர், நாட்டு மாதுளை ஜூஸ், கரும்பு சாறு போன்ற நீர் ஆகாரங்களை ஐஸ் இன்றி ஒரு 1 மணி நேரத்திற்கு ஒரு முறை பருகுவது டெங்குவை வெகுவிரைவில் எதிர்த்து இரத்ததட்டுக்களை அதிகரிக்க செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள் “