சென்னை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு!
ED Raid In Chennai Lyca Productions Idamporul
சென்னையில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் அமலாக்கத்துறை ரெய்டு நிகழ்த்தி வருகிறது.
கத்தி, 2.0, பொன்னியின் செல்வன் போன்ற படங்களை தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை ரெய்டு நிகழ்த்தி வருகிறது. சென்னையில் உள்ள பல்வேறு கிளைகளில் நிகழ்ந்து வரும் இந்த ரெய்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ நடிகர் அஜித் குமார் அவர்களின் விடா முயற்சி, இயக்குநர் ஷங்கர் அவர்களின் இந்தியன் 2 திரைப்படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்சனஸ் மீது ரெய்டு என்பதால் சினிமாத்துறையில் சற்றே பதட்டம் நீடித்து வருகிறது “